திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 001. இறைமை வழிபாடு
01. அறத்துப் பால் 001. அதிகாரம் 01. பாயிர இயல் 001. இறைமை வழிபாடு மக்கள் கடைப்பிடிக்கத் தக்க இறைமை ஆகிய நிறைபண்புகள். அகர முதல, எழுத்(து)எல்லாம்; ஆதி பகவன், முற்றே உலகு. எழுத்துக்களுக்கு, அகரம் முதல்; உலகினுக்கு, இறைவன் முதல். கற்றதனால் ஆய பயன்என்கொல்…? வால்அறிவன் நல்தாள், தொழாஅர் எனின். தூய அறிவன்வழியைப் பின்பற்றாத சீரிய கல்வியால், பயன்என்….? மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார், நிலமிசை நீடுவாழ் வார். மலரைவிட,…