இலக்குவனார் மாண்பும் இற்றைப் புலவரும் – பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
இலக்குவனார் மாண்பும் இற்றைப் புலவரும் வெள்ளம்போல் தமிழர்களின் கூட்டம் அன்று வீரத்தால் திரண்டெழுந்தபோது நம்மின் தெள்ளமுதத் தமிழ்ப்புலவர் என்ன செய்தார் திறனற்று வாய்மூடி இருந்தார்! ஆனால் கள்ளம்இல் குணம் கொண்டார் தமிழ்ப்ப கையைக் கனன்று எழுந்து தீய்க்கின்ற செந்தீ! அன்பை வள்ளல்போல் அளிக்கின்ற பெரிய ஆசான் வம்புக்குப் பணியாமல் குரல் கொடுத்தார்! சிறையினிலே அடைபட்டார்! இழந்தார் வேலை! செக்கிழுக்கும் மாட்டைப்போல் தமிழா சான்கள் குறைகொண்ட மதியாலே கண்டும் தம்மின் கும்பிஒன்று நிறைந்தாலே போதும் என்று முறையின்றிப் பேசாமல் இருந்தார்! மான மூச்சில்லை! இலக்குவனார்…