தி.வே.விசயலட்சுமியின் ‘இலக்கிய ஆய்வுகள்’ நூல் வெளியீடு
சித்திரை 11, 2048 / 24-4-2017 அன்று சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்தியா பவன் அரங்கில், புலவர் தி.வே.விசயலட்சுமி எழுதிய ‘இலக்கிய ஆய்வுகள்’ என்ற நூலை மாண்புமிகு நீதியரசர் வள்ளிநாயகம் வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். முனைவர் பெ. அருத்தநாரீசுவரன், முனைவர் சரசுவதி இராமநாதன், அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர். கிருட்டிணன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்ந்துரை நல்கினர். முனைவர் கோ பெரியண்ணன் தலைமையுரை ஆற்றினார். முனைவர் உலகநாயகி பழனி நிரலுரை ஆற்ற விழா இனிதே நிறைவுற்றது.
தி.வே.விசயலட்சுமியின் ‘இலக்கிய ஆய்வுகள்’ நூல் வெளியீடு
சித்திரை 11, 2048 திங்கள் ஏப்பிரல் 24, 2017 மாலை அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் புலவர் தி.வே.விசயலட்சுமி எழுதிய ‘இலக்கிய ஆய்வுகள்’ நூல் வெளியீடு பாரதிய வித்தியாபவன் சிற்றரங்கம், சென்னை 600 004