ஒரே நாளில் இரண்டு இலக்கிய விருதுகள் பெற்ற கவிஞர் மு.முருகேசு
ஒரே நாளில் இரண்டு இலக்கிய விருதுகள் பெற்ற கவிஞர் மு.முருகேசு வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு, தமிழ்க்குறும்பா (ஐக்கூ கவிதைகள்) குறித்த தொடர் இலக்கிய பங்களிப்புக்காகவும், தனது சிறுவர் இலக்கிய நூலுக்காகவும் ஒரே நாளில் இரண்டு இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார். சிவகாசியிலிருந்து வெளிவரும் கந்தகப்பூக்கள், நீலநிலா இலக்கிய இதழ்கள் சார்பில் தமிழ்க் குறும்பா(ஐக்கூ கவிதை) நூற்றாண்டு விழா (புரட்டாசி 22, தி.பி.2048 / அட்டோபர்-8, ஞாயிறன்று) சிவகாசியில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழகம் முழுவதுமிருந்தும் ஏராளமான குறும்பா(ஐக்கூ) கவிஞர்கள்…
தினத்தந்தி தமிழர்களின் சொத்து – தங்கர் பச்சான்
சி.பா.ஆதித்தனார் 111-வது பிறந்தநாள் மற்றும் இலக்கிய பரிசளிப்பு விழா நேற்று மாலை ராணி சீதை மன்றத்தில் நடந்தது. சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசு உரூ.2 இலட்சம் ‘தங்கர்பச்சான் கதைகள்’ என்ற நூலுக்காகப் பெற்ற தங்கர்பச்சான் ஏற்புரையாற்றினார். அப்பொழுது பின்வருமாறு தெரிவித்தார்: இலக்கியப் பரிசுகளும், விருதுகளும் இலக்கியத் தரத்தை உயர்த்துவதற்காகத் தரப்படுகின்றன என்பதைவிட இலக்கியவாதிகளை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதற்காகவே தரப்படுவதாக உணர்கிறேன். திரைப்படத் துறையைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் என் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வது இலக்கியத்தின் வழியாகத்தான். திரைப்படப் படைப்பாற்றலுக்காக எனக்கு…