நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2 – சந்தர் சுப்பிரமணியன்
(நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 தொடர்ச்சி) நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2 11)? இன்றைய அவசரகதி உலகில் சிற்றிதழ்களுக்கு – பொதுவாக இதழ்களுக்கு வாசகர்கள் உள்ளார்களா? அல்லது குறைந்து வருகிறதா? வாசகர்களின் ஆர்வம் குறைந்துள்ளது என்று சொல்லவியலாது ஏனெனில், ஆனந்த விகடன் போன்ற பதிப்பகங்கள், வெகுவாக அறியப்படாத எழுத்தாளர்களின் நூல்களைக்கூட பத்தாயிரம் படிகளுக்கு மேல் பதிப்பிடுகின்றன. ஆனால் வாசகர்கள் எதை விரும்பிப் படிக்கிறார்கள் என்பதே கேள்விக்குரியது. ஊன்றிக்கற்க வேண்டிய இலக்கியங்களைக் கற்காமல்,…
நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 – சந்தர் சுப்பிரமணியன்
நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 பெரும்பேராசிரியர் திரு இலக்குவனார் அவர்களின் புதல்வர் பேராசிரியர் திரு மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு, அண்மையில் தமிழக அரசு திரு.வி.க. விருது வழங்கிச் சிறப்பித்தது. பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களுடன் இலக்கியவேல் ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட காணல். 1.? அண்மையில் தமிழக அரசால் திரு.வி.க. விருது உங்களுக்கு வழங்கப்பட்டது. என் சார்பிலும் இலக்கியவேல் வாசகர்கள் சார்பிலும் வாழ்த்துகள். அது குறித்து நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா? அரசு பல்வேறான விருதுகளை…
நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 3/3 – நாகலட்சுமி சண்முகம் : சந்தர் சுப்பிரமணியன்
(நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 2/3 – தொடர்ச்சி) நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 3/3 – நாகலட்சுமி சண்முகம் வெறும் படியெடுத்தல் எனப் பொதுவாக அறியப்படும் மொழிபெயர்ப்பை எப்படி ஒரு கலையாக நீங்கள் உணர்கிறீர்கள்? மொழிபெயர்ப்பு என்பது கண்டிப்பாக ஒரு கலை. படிப்பவர்கள் அதை மொழிபெயர்ப்பு என உணரா வண்ணம் எழுதுவதே அக்கலையின் உச்சம். சில நேரங்களில், நூல்களின் தலைப்பை மொழிபெயர்ப்பதே கடினமாக இருக்கும். எளிய மூலப்பொருளைக் கூட மெருகேற்றிக் கொடுப்பதே மொழிபெயர்ப்பின் அரும்பணி. தொழிலாக மட்டுமின்றி, அது நம் சிந்தனைத்திறனையும்…
நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 2/3 – நாகலட்சுமி சண்முகம் : சந்தர் சுப்பிரமணியன்
(நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 1/3 தொடர்ச்சி) நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 2/3 நீங்கள் மொழிபெயர்த்த நூல்களின் எழுத்தாளர்கள் – அப்துல் கலாம் தவிர – மற்றவர்கள் அமெரிக்க எழுத்தாளர்கள் இல்லையா? ஆம்! எனினும், அண்மையில் இந்திய எழுத்தாளரான ஆனந்த நீலகண்டன் அவர்களின் ‘அசுரா’ என்ற புதினத்தை ‘அசுரன்’ என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளேன். இது இராவணனின் கண்ணோட்டத்தில் இராமாயணம் குறித்த நூல். பொதுவாக, தன்முன்னேற்ற நூல்கள் கட்டுரைகளாக வரும். புதினம் என வரும்பொழுது, மொழியாக்கத்தில் அதில் வரும் அத்தனைப் பாத்திரங்களின்…
நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 1/3 – நாகலட்சுமி சண்முகம்
நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 1/3 தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்களுடன் ‘இலக்கியவேல்’ ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட நேர்காணல். வணக்கம்! அண்மையில் உங்களுக்குத் தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்பட்டதற்கு ‘இலக்கியவேல்’ சார்பில் வாழ்த்துகள்! அந்த விருது குறித்துச் செய்திகளைச் சொல்லுங்களேன்! வணக்கம்! பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புப் படைப்புகளை ஆக்கும் படைப்பாளிகளுக்கான இவ்விருது ஆண்டுதோறும் ஒருவருக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. அரசின் செய்திக்குறிப்பைப் பார்த்துவிட்டு இதற்காக…