கருவிகள் 1600 : 521-560 : இலக்குவனார் திருவள்ளுவன்
521. கப்பற்பயணவரைவி – loxodograph : கப்பல்பயணத்தைப்பதிய உதவும் கருவி. 522. கம்பளித்தரமானி – lanameter : கம்பளியின் தரத்தை அளவிடும் கருவி. 523. கம்பிவலைத் திருத்தி மானி -grid-rectification meter 524. கம்பிவலை நிறமாலைமானி – grid spectrometer 525. கம்பிவலை மின்னோட்ட மானி/ கம்பிவலை அலையியற்றி-grid-dip meter/ grid-dip oscillator : கம்பிவலை மின்னோட்டத்தை அறியக் கம்பிவலையில் ஒருங்கிணைந்த – பன்முகவீச்சு மின்னணுக் குழாய் அலையியற்றிக் – கருவி. 526. கயக்கமானி – taseometer : கட்டமைப்பின் கயக்கத்தை (stress in…
பணிமலர் 1. அவ்வளவு தங்கமும் உங்களுக்குத்தான்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(என் பணிவாழ்க்கையில் எண்ணற்ற மறுவாழ்வுப்பணிகளையும் முன்னோடிப் பணிகளையும் ஆற்றியுள்ளேன். காலமுறையில் இல்லாமல் அவ்வப்போது பூக்கும் நினைவின் மணத்தைப் பரப்ப விழைகிறேன்.) தமிழ்நாடு சிறைத்துறையில் நன்னடத்தை அலுவராகப் பணியாற்றிய பொழுது ஒரு நாள் நண்பர் ‘சௌ.’ என் பக்கத்தில் வந்தமர்ந்தார். “நேர்மையான அதிகாரி ஒருவர் பெயரைக் கூறுங்கள்” என்றார். நான்,“திருவள்ளுவன்” என்றேன். உடனே அவர், “நீங்கள் நேர்மையானவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்காக உங்கள் பெயரையே கூறுவதா?” என்றார். நீங்கள் பன்மையில் கேட்டிருந்தால் செளந்தரபாண்டியன், மீசை(பெரியசாமி) எனச் சிலரையும் சேர்த்துச் சொல்லியிருப்பேன். ஒருமையில்…
காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி
நம் மொழிக்கு நம் முன்னோர் சூட்டிய பெயர் ‘தமிழ்’ என்பதுதான். ஆனால், சிலர் பிற்பட்ட வழக்கான ‘திராவிடம்’ என்பதிலிருந்து ‘தமிழ்’ வந்ததாகத் தவறாகப் பரப்பி வருகின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நூலான – உலகின் முதல் நூலான – தமிழர்க்குத் தமிழில் கிடைத்துள்ள முதல் நூலான – தொல்காப்பியத்திலேயே ‘தமிழ்’ இடம் பெற்றுள்ளது. இதன் தொன்மையை மறைக்கும் வகையிலேயே ‘தமிழ்’ என்னும் சொல்லைப் பிற்கால வழக்காகக் குறிப்பிடுகின்றனர். சிலர் ‘தமிழ்’ என்னும் சொல் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளதா என அறியாமையில் கேட்கின்றனர். அதன் மூலம்…