வாகைச்செல்விக்கு வாழ்த்துகள் வரையில! – இலக்குவனார் திருவள்ளுவன்

வாகைச்செல்விக்கு வாழ்த்துகள் வரையில!  இப்போதைய – தி.பி.2047 / கி.பி. 2016 ஆம்  ஆண்டுச் – சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் முதல்வர் புரட்சித்தலைவி  செயலலிதாவிற்கு வாழ்த்துகள்!   ‘பள்ளிக்கணக்கு புள்ளிக்கு உதவாது’ என்பர். அதுபோல் புள்ளிவிவரங்களை அடுக்கி, உண்மையான வெற்றியல்ல இது எனச் சில தரப்பால் கூறப்பட்டாலும் நம் அரசியலமைப்பின்படி இதுதான் வெற்றி.   ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்றாலும் மக்களாட்சியில் இதுதான் வெற்றி.   மொத்தத்தில் மிகுதியான வாக்குகள் பெற்றுச் சில இடங்களில் வெற்றி பெற்ற கட்சியைவிட…

என்று முடியும் ஈழ ஏதிலியர் துயரம்? – இலக்குவனார் திருவள்ளுவன்

செய்தியும் சிந்தனையும் [செய்தி:  நண்பர்  இ.பு.ஞானப்பிரகாசன், மின்னம்பலம் (https://minnambalam.com/k/1459296056 )   தளத்தில் இருந்து பின் வரும் செய்தியை அனுப்பியிருந்தார்: திருச்சிராப்பள்ளி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் ஈழத் தமிழ் ஏதிலியர்கள் பதினான்கு பேர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொய் வழக்குப் பதிவு செய்து தங்களைச் சிறையில் அடைத்துள்ளதாகவும், தங்களை விடுவிக்கும் வரை காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மார்ச்சு 28, 29 ஆகிய இரண்டு நாட்களாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள், மூன்றாவது…

ஈழ உறவு இரவீந்திரன் மரணம் தமிழகத்தில் வாழும் 8 கோடி தமிழருக்கும் தலைகுனிவு- சீமான்

ஈழ உறவு இரவீந்திரன் மரணம் தமிழகத்தில் வாழும் 8 கோடி தமிழருக்கும் தலைகுனிவு- சீமான்   சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பித் தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த நம் ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் அகதிகள் என்று அடைமொழியிட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்து மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்களை ‘கியூ’ பிரிவு காவலர்களும், வருவாய் அதிகாரிகளும் படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. ஐயத்திற்குரிய குற்றவாளிகளைப் போலவே நடத்துவது, பைப்பறி(பிக் பாக்கெட்டு), வழிப்பறி செய்தார்கள் போன்ற இல்லாத, சொத்தையான காரணங்களைக் கூறியும், காரணங்கள் ஏதுமில்லையெனும் நிலையில் அயல் நாட்டவர்…

ஈழத்தமிழரைப் படுத்தும் பாடு! வருங்காலம் நம்மைப் பழிதூற்றும்!

ஈழத்தமிழரைப் படுத்தும் பாடு! வருங்காலம் நம்மைப் பழிதூற்றும்! செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு (திருக்குறள் 86) என்னும் திருவள்ளுவர் நெறி தமிழர்க்கே உரிய பண்பு என்கிறோம். தவத்தோர் அடைக்கலம் தான்சிறி தாயினும் மிகப்பே ரின்பம் தருமது கேளாய் (சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை) என இளங்கோஅடிகள் கூறும் அடைக்கலப்பண்பில் சிறந்தவர்கள் நாம் என்கிறோம்.   ஆனால், இவையெல்லாம் யாருக்காக? நம்மவர் – தமிழினத்தவர் – எனில் விருந்தினராகக் கருதுவதும் கிடையாது; அடைக்கலம் தருவதும் கிடையாது.   ஒருவேளை அடைக்கல நாடகம் ஆடினாலும் அவர்களை உள்ளத்தாலும்…