முதலமைச்சர் செல்வி செயலலிதா அறிவித்துள்ள, சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றிப் பயணம் மேற்கொள்ளும் புதிய சலுகைத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. பேருந்துகளில் பயணம் செய்வதற்கான அடையாளச்சீட்டுகளை முதியோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.   அரசுப் பேருந்துகளில், 60 அகவைக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள வகை செய்யும் புதிய திட்டம் ஒன்றை, முதலமைச்சர் செல்வி செயலலிதா, கடந்த 18- ஆம் நாள் சட்டப்பேரவையில் அறிவித்தார். முதற்கட்டமாக, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், இன்றுமுதல்…