தேவதானப்பட்டியில் பொதுவுடைமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேவதானப்பட்டியில் தனியார் நிறுவனத்தைக் கண்டித்துப் பொதுவுடைமைக் கட்சியினர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஆர்ப்பாட்டம் தேவதானப்பட்டியில் தனியார் நிறுவனத்தைக் கண்டித்துப் பொதுவுடைமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் இலாசர் இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். திண்டுக்கலில் இருந்து குமுளி வரை இருவழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஒப்பந்தத்தை ஆந்திராவைச்சேர்ந்த தனியார் நிறுவனம் ஏற்று நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு போதிய நிதியில்லாததால்…