இறுதிவரை இந்தியை எதிர்ப்பேன் – பேரறிஞர் அண்ணா
சென்னைக் கடற்கரையிலே செந்தமிழ் காக்கச் சிறை சென்று மீண்ட அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு. இந்தி ஒழியும் வரைப் போராட்டம் நீடிக்கும். சூன் 14ஆம் நாள்: கன்னித் தமிழ்க்காவலனின் போர் முழக்கத்தைச் செவிமடுக்க வெள்ளமென மக்கள் கூட்டம் திரண்டெழுந்தது. தலைநகரிலே தண்டமிழ் காக்கும் தனிப்பெருந் தலைவனுக்கு வரலாறு காணாத மாபெரும் வரவேற்பு. 1965 வரை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவதின் நன்னோக்கத்தைப் பற்றி அன்று எழுதினேன். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று, 1965ஆம் ஆண்டிலே நாம் முடிவு எடுக்குங்கால், நம்முடைய போராட்டம், நேருபெருமகனாரின் கண்களுக்குப் புலனாகும்; அவருடைய…