தோழர் தியாகு எழுதுகிறார் 188 : செவ்வணக்கம் தோழர் (இ)லிங்கன்!
(தோழர் தியாகு எழுதுகிறார் 187 : ப.த.ச.சட்டத்தைத் திரும்பப் பெறு! தே.பு.மு.வைக் கலைத்திடு! – தொடர்ச்சி) செவ்வணக்கம் தோழர் (இ)லிங்கன்! அந்தத் தாடிக்காரர் மறைந்து விட்டார் என்ற செய்தி வந்த போது நம்புவது கடினமாய் இருந்தது. யார்? தோழர் (இ)லிங்கனா? சிலநாள் முன்பு செய்தியாளர் சங்கத்தில் நடந்த கூட்டத்தில் பார்த்தாற்போல் உள்ளதே? என்ன நடந்தது? என்ன? உயர்நீதிமன்ற வளாகத்திலேயே மாரடைப்பால் சாவு நேரிட்டதா? சென்னை நகரத்தில் நான் பேசுகிற ஒவ்வொரு கூட்டத்திலும் அவரைப் பார்த்துள்ளேன். மிகச் சிறிய அரங்கக் கூட்டமானாலும் தோழர் (இ)லிங்கன் பாசுடின்…