வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 1.32 – இல்லமைத்தல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.31. தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 32. இல்லமைத்தல் அகல நீள மரைக்கான் மைல்கொளல். வீடு கட்டுவதற்கான மனை 20 புதுக்கோல்(மீட்டர்) நீளமும் 20 புதுக்கோல்(மீட்டர்) அகலமும் உடையதாக இருக்க வேண்டும். ஈரிரு புறமதி லெதிரெதிர் வழிசெயல். வீட்டின் நான்கு புறமும் மதில் சுவர்கள் கட்டப்பட வேண்டும். எதிரெதிராக வாசல்கள் (முன் வாசல், பின்வாசல்) இருக்கவேண்டும். மத்தியிற் புறமதின் மட்டமே லிற்செயல். மனையின் நடுவில் வீடு மதில் சுவர்களைவிட உயரமாகக் கட்டப்பட வேண்டும். இல்லிற் கீரா யிரமடி சதுரமாம். வீடு…