வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 5.
(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 4. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல் (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.) வாழ்க்கைத் துணைநலம் இல்லற வாழ்க்கை ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கணவனும் மனைவியுமாகக் கூடி வாழும் வாழ்க்கையாகும். இருவருள் ஒருவர் இல்லையானாலும் இல்லறம் சிறப்புறாது. இல்வாழ்வு அமையப் பெறுவதற்கே இருவரும் ஒன்று கூட வேண்டும். இல்லற வாழ்வில் இருவருமே தலைவர்கள். கணவன் தலைவன்; மனைவி…