வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 31(2.01). இல்வாழ் வுயர்வு
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.30.தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 31. இல்வாழ் வுயர்வு இல்வாழ் வென்பதோ ரில்லினில் வாழ்தல். இல்வாழ்வு என்பது குடும்பத்துடன் வாழ்வது ஆகும். எதிபாற் றுணையுடன் வதிதன் மிகநலம். எதிர்பால் துணையுடன் வாழ்வது மிகச் சிறந்தது ஆகும். இல்வாழ் வார்கட னில்லற மியற்றல். இல்வாழ்க்கைக்கு உரிய விதிகளைப் பின்பற்றி நடத்தலே இல்வாழ்க்கை நடத்துபவரின் கடமை ஆகும். என்றும்வே ளாண்மை யியற்றலே யில்லறம். எப்பொழுதும் விவசாயத்தில் ஈடுபடுவதே இல்லறம் ஆகும். இல்வாழ் வில்லெனி லில்லையிவ் வுலகே. இல்வாழ்க்கை நடத்துபவர் இல்லை எனில் இவ்வுலகம் இல்லை(ஏனெனில்…