கவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு
கவிஞர் மு.முருகேசு எழுதிய கட்டுரை நூலுக்குச் சிறந்த வாழ்வியல் நூலுக்கான முதல் பரிசு வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய ’இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?’ எனும் நூலுக்கு, கவிதை உறவு வழங்கும் ’மனிதநேயம் மற்றும் வாழ்வியல் நூலுக்கான முதல் பரிசு’ கிடைத்துள்ளது. கடந்த 46 ஆண்டுகளாகச் சென்னையிலிருந்து வெளிவரும் ‘கவிதை உறவு’ சார்பில், 15 ஆண்டுகளாகத் தமிழில் வெளியாகும் சிறந்த படைப்பிலக்கிய நூல்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கின்றனர். 2017- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா…
கலைகளால் செழிக்கும் செம்மொழி, தொடர் நிகழ்ச்சி 09
புரட்டாசி 24, 2048 செவ்வாய் 10.10.2017 மாலை 6.30 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை 600 004 இலக்கியவீதி பாரதிய வித்தியா பவன் கிருட்டிணா இனிப்பகம் கலைகளால் செழிக்கும் செம்மொழி தொடர் நிகழ்ச்சி 09 செம்மொழியின் செழுமைக்கு ஆன்மிக அரங்குகளின் பங்கு தலைமை : திரு இல. கணேசன் (தலைவர்: பொற்றாமரை கலை இலக்கிய அமைப்பு) சிறப்புரை : முனைவர் தெ. ஞானசுந்தரம் அன்னம் விருது பெறுபவர் : கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா தகுதியுரை : செல்வி. ப. யாழினி இணைப்புரை…
மருத்துவமாமணி கண்ணப்பன் போற்றி விழாக்கள்
மருத்துவமாமணி கண்ணப்பன் அவர்களின் 81-ஆம் பிறந்தநாள் விழா & 5-ஆம் நினைவுநாள் மறைமலை இலக்குவனார், திருக்குறள் மோகனராசு,பெங்களூர் மருத்துவர் நாகேசு, பால.சீனிவாசன் ஆகியோர் பாராட்டப்பட்டனர். வாசுகி கண்ணப்பன் விழாவைச் சிறப்பாக நடத்தினார். இசைப்பாவலர் இரமணன், பா.ச.க.தலைவர் இல.கணேசன், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா.தாண்டவன், மு.சிவச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்