‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ தொடக்கவிழா – நூல் வெளியீடு
அன்புடையீர் வணக்கம். திஇநி-SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின்கீழ் மாணவர்களின் தமிழ்த் திறன்களையும் தமிழ் சார்ந்த கலைத் திறன்களையும் ஊக்குவிப்பதற்காகவும் அவற்றை அரங்கேற்றுவதற்குரிய மேடை அமைத்துத்தரவேண்டும் என்பதற்காகவும் ‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ என்ற ஒரு அமைப்பு தொடங்கப்படவுள்ளது. இதன் தொடக்கவிழா ஆவணி 17, 2046 / 03.09.2015 வியாழக்கிழமையன்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை காட்டாங்குளத்தூர் வளாகத்தில் அமைந்துள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் விகடன் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்துள்ள கணினித்தமிழ் – Tamil Computing என்ற எனது நூலும்…
தென்னாப்பிரிக்கஉலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கல்விப் பணி
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாப்பிரிக்கக் கிளை ஆற்றிவரும் அளப்பரிய கல்விப் பணி உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாபிப்ரிக்கக் கிளை கடந்த வாரம் வரலாற்று முதன்மை மிக்க ஒரு கல்விப் பணியின் பலனை அறுவடை செய்யும் அற்புதமான நிகழ்வைத் தென்னாப்பிரிக்காவின் தர்பன் நகரில் நடத்தியது. தமிழ் மொழி அழிந்துவிடுமோ என்று அனைவரும் அஞ்சும் நிலை நிலவும் தென்னாப்பிரிக்காவில் இயங்கிவரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாபிரிக்க கிளை ஏற்பாடு செய்த அங்குள்ள தமிழ் ஆசிரியர்களுக்கான பட்டயச் சான்றிதழ் வழங்கும் பட்டமளிப்பு விழாவில் உலகெங்கும் இருந்து…
இல.சுந்தரத்திற்குத் ‘தமிழ்நிதி’ விருது
திரு இராம வீரப்பன் தலைவர் சென்னைக் கம்பன் கழகம் தலைமையில் இளம் தலை முறையினரை ஊக்குவிக்கும் திட்டத்தில், உத்தமம் உறுப்பினர் கணினித்தமிழ் அறிஞர் இலசுந்தரம் (பேராசியர், தி.இரா.நி. (எசு.ஆர்.எம்.) பல்கலைக்கழகம்) இதுவரை ஆற்றியுள்ள பணியினைக் கருத்தில் கொண்டு ‘தமிழ்நிதி ‘ என்னும் விருதினை வழங்கிய நிகழ்ச்சி மார்கழி 29, 2045 / செவ்வாய்க்கிழமை(13.01.2015) மாலை 6.30 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது சிலம்பொலி செல்லப்பன், காப்பியக்களஞ்சியத்தின் மாத நிகழ்ச்சியாக சிலப்பதிகாரத்தில் நல்ல பல ஆழ்ந்த ஆய்வுகளை வழங்கி அவையோரை வியப்பில்…