(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3. மன்பதை வாழ்க்கை தொல்காப்பியம் தமிழ் மக்களின் முன்னேறிய மன்பதையைப் பெரிதும் வெளிப்படுத்துகிறது. வாழ்க்கையின் இலக்கு இப்பொழுதும், இனி எப்பொழுதும் மதிப்பு மிக்கதாக மிகவும் முன்னேறிய நிலையினதாகக் காணப்படுகிறது. தொல்காப்பியர் வாழ்க்கையின் இலக்காகப் பின்வருமாறு கூறுகிறார். காமம் சான்ற கடைக்கோட் காலை, ஏமம் சான்ற மக்களொடு துவன்றி, அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. (தொல்காப்பியம்: பொருள்.192) எனவே அனைவரும் பிறருக்கும், தமக்கும் பயன்தரக்கூடிய பெரும் செயல்களை அடைவதை இலக்காக கொண்டு அறவாழ்க்கை நடத்துவதையே…