வெருளி அறிவியல் 38 – 41 : இலக்குவனார் திருவள்ளுவன்
[வெருளி அறிவியல் 34 – 37 தொடர்ச்சி] வெருளி அறிவியல் 38 – 41 38. இடைவிலகல் வெருளி – exterviaphobia இடைவழியிலிருந்து விலகுவது குறித்த அளவுகடந்த பேரச்சம் இடைவிலகல் வெருளி. exter என்றால் கிரேக்கத்தில் வெளிப்புறம் என்றும் via வழி என்றும் பொருள். exter என்றால் இலத்தீனில் தன்னியல்பான எனப் பொருள். இலத்தீனிலும் via என்றால் வழி என்றுதான் பொருள். 00 39.இருள் வெருளி-Achluophobia/Lygophobia/Nyctophobia/Scotophobia இரவு, இரவுப்பொழுதில் வரும் இருட்டு முதலியன குறித்த வரம்பு கடந்த பேரச்சம் இரவு வெருளி/ இருண்மை வெருளி/…