அறமும் தரமும் அற்ற ஆய்வுகள் – பாரதிபாலன், தினமணி
அறமும் தரமும் அற்ற ஆய்வுகள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணி வாய்ப்பினைப் பெற வேண்டும் என்றால் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் (UGC) விதிமுறைகளின்படி ஒருவர் முதுநிலைப் பட்டப் படிப்பில் 55% மதிப்பெண்களுடன் தேசிய அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வில் (NET அல்லது SLET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றிருந்தால் இத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் இத்துடன் ஆசிரியர் தேர்வு வாரியம் அல்லது பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வு நடத்தினால் அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது விதி. நவம்பர் 2018…