எதிர்வரும் நுவரெலியா  இளவேனில் காலத்தை முன்னிட்டுத் தென்னிந்தியாவின்   புகழ்மிகு இசைக்குழுவான ஆசான்(ஈனோக்கு) இன்பராகம் (Enoch Rhythms) இசைக்குழுவினரின் தென்னிந்தியக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் இன்பஇராகங்கள் இசை நிகழ்ச்சி  சித்திரை 03, 2047 / 16.04.2016 அன்று நுவரெலியா சினிசிட்டா  திடலில்   நடைபெறவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நுவரெலியா மாநகர முதல்வர் மகிந்த தொடம்பே கமகே முன்னிலையில் ஈனோக்குஇசைக்குழுவின் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது. ஆசான் (ஈனோக்கு) இன்பராகம் குழுவினரின் இசை நிகழ்ச்சி எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டு நாளான சித்திரை 01, 2047 / 14.04.2016 அன்று …