இன்று .. இளைஞர் .. இலக்கியம் – குவிகம் நிகழ்வு
ஆவணி 25, 2047 / செட்டம்பர் 10, 2016 சனிக்கிழமை மாலை 6.30 மணி சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் சாலை, ஆழ்வார்பேட்டை சென்னை 600018 குவிகம் இலக்கிய வாசலின் இம்மாத நிகழ்வாக முழுவதும் இளைஞர்கள் வழங்கும் கதை, கவிதை, கருத்து நிகழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறையின் இலக்கியப் பார்வையினை அறிய இஃது ஒரு சாளரமாக அமையுமோ? நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். குவிகம் மின்னிதழ் படிக்க வலைப்பூ பார்க்க
இருபால் இளைஞர்களே! களம் புகுவீர்!
நிகழும் சித்திரை 11, ஏப்பிரல் 24 அன்று நாடாளுமன்றத்தேர்தலுக்கான வாக்குப் பதவி நடைபெறுகிறது. தமி்ழ் மக்களுக்கு எதிரானவர்களுக்குப் பாடம் புகட்டவும், தமிழ்நாட்டிலாவது தமிழ் வாழ வகை செய்வோருக்கு வாக்களிக்கவும் உரிய களமாக இதைக் கருத வேண்டும். அரசியல் ஊழல் கறை படியாத இருபால் இளைஞர்களும் மாணாக்கர்களும் தேர்தலில் முதல்முறை வாக்களிப்பவர்களும் முயன்றால் தவறான பாதையில் செல்லும் நாட்டின் போக்கைத் திருப்ப இயலும். அதற்காக அவர்கள் முன் இரு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றைச் செயல்படுத்தினால் போதும். முதல் வழி தேர்தல் பரப்புரை…