தன்னம்பிக்கையுடன் போட்டியிட்டால் வெற்றிபெற முடியும்
தன்னம்பிக்கையுடன் போட்டியிட்டால் வெற்றிபெற முடியும் – சிலம்பாட்ட வீரர்களுக்கு மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவுரை வந்தவாசி. நவம்.29. தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்டஅளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் வென்ற சிலம்பாட்ட வீரர்களுக்குப் பதக்கமும்,பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கும் விழா வந்தவாசி சிரீ அகிலாண்டேசுவரி மகளிர் கல்லூரிகலையரங்கில் நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவரும் தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக மாநிலத் தலைவருமான முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப., தலைமையின் கீழ்ச் செயல்படும் திருவண்ணாமலை மாவட்டச் சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்ட அளவிலானபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கமும் பாராட்டுச் சான்றிதழ்களும்வழங்கப்பட்டன. …
கதைகளின் வழியாக நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும்
கதைகளின் வழியாகக் குழந்தைகளின் மனத்தில் நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் செங்கற்பட்டு.நவம்.13, இளையோர் கூரறிவினர்(little jacky) பதின் மேனிலைப்பள்ளியில் குழந்தைகள் நாள் விழாவையொட்டி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. பள்ளியில் படிக்கிற காலத்திலேயே கதைகளின் வழியாகக் குழந்தைகளின் மனத்தில் நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் என்று தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப. பேசினார். செங்கற்பட்டு இளையோர் கூரறிவினர்(little jacky) கல்விக் குழுமத் தலைவர் ஞா.சாசுவா சாம் தானி இவ்விழாவிற்குத் தலைமையேற்றார். பள்ளி ஆசிரியர் ம.இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். கவிஞர் மு.முருகேசு எழுதிய…
இ.ஆ.ப., இ.கா.ப. தேர்வில் சமூக நீதிக்கு எதிரான புதிய விதிமுறைகள்: மத்திய அரசுக்குத் தாலின் கண்டனம்
இ.ஆ.ப., இ.கா.ப. தேர்வில் சமூக நீதிக்கு எதிரான புதிய விதிமுறைகள்: மத்திய அரசுக்குத் தாலின் கண்டனம் சென்னை: குடிமைப்பணித் தேர்வு முறையில் மத்திய அரசு புகுத்த உள்ள புதிய முறைக்குத் தாலின் பின்வருமாறு கண்டனம் தெரிவித்துள்ளார். “இ.ஆ.ப. முதலான அகில இந்தியப் பணிகளுக்கு இதுவரை ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம்(யூபிஎஸ்சி) முதல்நிலை, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வை நடத்தித் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. அதில், மிகச்சிறந்த மதிப்பெண்கள் வாங்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினச் சமுதாயங்களைச் சார்ந்த இளைஞர்கள் ஏன் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடியாமல்…
சித்தர்கள் கூறும் இரகசியங்கள் -அணிந்துரை
டி.வி.வெங்கட்டராமன், இ.ஆ.ப., (ப.நி.), முன்னாள் தலைமைச்செயலாளர், தமிழ்நாடு அரசு. நூலாசிரியர், திருமூலர் அருளிய திருமந்திரம் – அனுபவ உரை. 6, (17), முதல் நிழற்சாலை, இந்திரா நகர், சென்னை – 600 020. தொலைபேசி: 044-24417705 அணிந்துரை அருமை நண்பர் இரா.கற்பூரசுந்தரபாண்டியன் அவர்களும் அவருடைய மனைவியார் திருமதி. சாந்தா அவர்களும் ‘சித்தர்கள் கூறும் இரகசியங்கள்’ என்ற தலைப்பில் வழங்கியுள்ள இந்த கட்டுரைத் தொகுப்பினை படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். சித்தர் இலக்கியத்திற்கு இந்தத் தம்பதியர் அளித்துள்ள படைப்பு ஒரு பெரும் பரிசாகும் என்று…
மு.முருகேசு எழுதிய ஐக்கூ நூல்கள் வெளியிடப்பட்டன
தமிழ் ஐக்கூ நூற்றாண்டு விழாவில் மு.முருகேசு எழுதிய ஐக்கூ நூல்கள் வெளியிடப்பட்டன! சென்னை. மார்கழி 09, திசம்.24, பனுவல் புத்தக நிலையமும், தமிழ் ஐக்கூ கவிதை இயக்கமும் இணைந்து நடத்திய தமிழ் ஐக்கூ நூற்றாண்டையொட்டி மு.முருகேசு எழுதிய ஐக்கூ நூல்கள் வெளியீட்டு விழா திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்குக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையேற்றார். கவிஞர் நாகா அதியன் அனைவரையும் வரவேற்றார். சப்பானிய ஐக்கூ கவிதைகள் மாக்கவி பாரதியாரால் 1916-ஆம் ஆண்டு தமிழில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது….