புதுயார்க்கு தமிழ்ச்சங்கம் : பதிவர் இ.பு.ஞானப்பிரகாசம் உரை
புதுயார்க்கு தமிழ்ச்சங்கம் வெள்ளிதோறும் இலக்கிய உலா அமெரிக்கா: மார்கழி 02, 2052 / சனி / 17.12.2021 இரவு 9.00 இந்தியா: மார்கழி 03 / ஞாயிறு / 18.12.2021 நேரம் காலை 7.30 சிறப்புரை : பதிவர் இ.பு.ஞானப்பிரகாசம் “அன்றாட வாழ்வில் தமிழ்ப்பயன்பாடு“ மெய்ந்நிகர் நிகழ்ச்சிக்கான கூட்டப்பதிவு விவரங்களை அழைப்பிதழில் காண்க.
கிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி?- இ.பு.ஞானப்பிரகாசன்
கிண்டில் தளத்தில் ‘வெருளி அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி? நீங்கள் கிண்டில் வரையிலி(unlimited) திட்டத்தில் உறுப்பினராக இருந்தால் நூலை இலவயமாகவே படிக்கலாம். உங்கள் கிண்டில் குறுஞ்செயலியைத் (Kindle app) திறந்து அதில் இலக்குவனார் திருவள்ளுவன் என்றோவெருளி அறிவியல் ( Science of Phobia) என்றோ தேடல் பெட்டியில் எழுதினால் நூலின் பக்கம் வரும். அந்தப் பக்கத்தில் உள்ள இலவயமாகப் படித்திட / Read for Free பொத்தானை அழுத்தி நீங்கள் இலவயமாகவே நூலைப் படிக்க முடியும். கிண்டில் வரையிலி(unlimited) திட்டத்தில் நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் நூலைப் பணம் கொடுத்து வாங்கிக் கிண்டில்…
வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி மாநிலம் முழுவதும் தொடக்கம்
வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி மாநிலம் முழுவதும் தொடக்கம் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தும் சிறப்புத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் பிப்பிரவரி 15 முதல் 29–ஆம் நாள் வரை 234 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர் விவரங்களை உறுதிப்படுத்துதல், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளைக் களைதல், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள், ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளவர்கள் பெயர்களையும் இறந்தவர்கள் பெயர்களையும் நீக்குதல் ஆகியவை இத்திட்டத்தின் தலையாய நோக்கமாகும். …
பழந்தமிழர் கணிதம் தேடுவோம் வாரீர்! – அழைக்கிறார் தமிழ்த் தொண்டர் பொள்ளாச்சி நசன்!
தமிழர் கணக்கியல் – பழந்தமிழர் கணிதம். தேடுவோம் வாரீர்! தமிழ் எண் உருக்கள்தாம் கடல் கடந்து சென்று தேய்ந்து, உருமாறி நாம் இப்பொழுது பயன்படுத்துகிற எண்களாக மாறி நம்மை அடைந்துள்ளன. ஒன்று முதல் எட்டு வரையிலான எண்கள்தாம் முதலில் காணப்பட்டன. சுழியம், தொன்பது என்பவை தொடர்ச்சிக்காக இணைக்கப்பட்டவை. தமிழர் கற்றிருந்த ௬௪ (64) கலைகளிலும் இந்த எண்ணுருக்களின் அடிப்படை அமைந்திருக்கலாம். ‘எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்’ என்பதன் வழி எண்ணுக்கான நூல்கள் நிறைய இருந்திருக்கலாம். அவை அனைத்தும் இப்பொழுது இல்லை. கணக்கதிகாரம்…