மறைமலையடிகளாரின் பன்முகப்பார்வை – திறனாய்வரங்க ஒளிப்படங்கள்
தை 19, 2047 / பிப்.02, 2016 – சென்னை [பெரிய அளவில் படங்களைக் காணப் படத்தினை அழுத்தவும்]
கலைச்சொல் தெளிவோம் 15 – நெறியுரை: சில குறிப்புகள்
கலைச்சொல் ஆர்வலர் மிகுதியாக இருப்பினும் கலைச்சொற்கள் கண்டறியுநரும் புதியன புனையுநரும் ஒற்றைப்படை எண்ணிக்கையில்தான் உள்ளனர். நான் மாணவப்பருவத்திலிருந்தே கலைச்சொற்களில் ஆர்வம் காட்டி வருகின்றேன். நான் ஆட்சித்துறையில் இருந்தமையால் தமிழ்க்கலைச்சொற்களையும் புதிய கலைச்சொற்களையும் பயன்பாட்டிற்குக் கொணரும் வாய்ப்பு கிடைத்தது. அறிவியல் கலைச்சொற்களைப் பொருத்தவரை கட்டுரையாளர்களும் நூலாசிரியர்களும் பயன்படுத்தினால்தான் நிலைப்புத்தன்மை கிட்டும். வெறும் அ்கராதியாக இல்லாமல் சொல் விளக்கமாக இருந்தால்தான் புரிந்து கொண்டு பயன்படுத்த இயலும் என்பதால்தான் கலைச்சொல் விளக்கங்கள் அளித்து வருகின்றேன்.ஒரு சொல்லுக்கான பொருளையோ விளக்கத்தையோ தருவதுடன் நில்லாமல் அச்சொல் பயன்பாட்டில் உள்ள பிற இடங்களுக்கும்…