சொந்தக் காணிகளில் குடியமர்த்தப்படும்வரை போராடுவோம்: தொடரும் கேப்பாப்பிலவு போராட்டம்
சொந்தக் காணிகளில் குடியமர்த்தப்படும்வரை போராடுவோம்: தொடரும் கேப்பாப்பிலவு போராட்டம் விமானப்படைத் தளத்திற்கு முன்பாக உள்ள வீதியில், கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்கள் கடந்த 9 ஆம் நாள் முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குளிரையும் வெயிலையும் பொருட்படுத்தாது தமது பூர்வீக நிலத்தினை மீட்கும் போராட்டத்தில் கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் 2 ஆவது வாரமாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். .அம்மக்கள், சொந்தக் காணிகளில் குடியமர்த்தப்படும்வரை தமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.r. மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப் பல்வேறு தரப்பினரும்…
ஈழத்தமிழரைப் படுத்தும் பாடு! வருங்காலம் நம்மைப் பழிதூற்றும்!
ஈழத்தமிழரைப் படுத்தும் பாடு! வருங்காலம் நம்மைப் பழிதூற்றும்! செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு (திருக்குறள் 86) என்னும் திருவள்ளுவர் நெறி தமிழர்க்கே உரிய பண்பு என்கிறோம். தவத்தோர் அடைக்கலம் தான்சிறி தாயினும் மிகப்பே ரின்பம் தருமது கேளாய் (சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை) என இளங்கோஅடிகள் கூறும் அடைக்கலப்பண்பில் சிறந்தவர்கள் நாம் என்கிறோம். ஆனால், இவையெல்லாம் யாருக்காக? நம்மவர் – தமிழினத்தவர் – எனில் விருந்தினராகக் கருதுவதும் கிடையாது; அடைக்கலம் தருவதும் கிடையாது. ஒருவேளை அடைக்கல நாடகம் ஆடினாலும் அவர்களை உள்ளத்தாலும்…