சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 06 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா
(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 05 – இன் தொடர்ச்சி) 6/6 இர.சிறீகந்தராசா: நீங்கள் எவ்வளவு காலம் மொத்தமாக உள்ளே இருந்தீர்கள்? து.வரதராசா: மூன்றரை மாதங்கள் இருக்கும். இர.சிறீகந்தராசா: நீங்கள் வெளியில் வந்ததும் அங்கே என்ன செய்தீர்கள்? து.வரதராசா: நாங்கள் வெளியில் வந்தவுடன் கடமையை மேற்கொள்ள முடியாமல் இருந்தது. ஏனென்றால், எங்களை மீண்டும் கடமையாற்ற விடுவதற்குப் பாதுகாப்பு அமைச்சு, இராணுவ அமைச்சு ஆகியவற்றிடம் இருந்து நலவாழ்வுத் திணைக்களத்திற்கு ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த நடவடிக்கையை எடுப்பதற்குக் கொஞ்ச காலம் எடுத்தது. அதன் பின்புதான்…
சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 05 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா
(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 04 இன் தொடர்ச்சி) 5 இர.சிறீகந்தராசா: நீங்கள் அங்கு இருந்தபொழுது உடனிருந்த கைதிகள் உடலளவிலோ உளவியலளவிலோ ஏதேனும் வதைகளுக்கு உட்பட்ட காட்சிகளைக் காண முடிந்ததா? து.வரதராசா: உளவியல் தாக்குதல் எல்லாருக்குமே இருந்தது. எனக்குக் கூட! மற்றைய மருத்துவர்களுக்கும் எல்லாம். தொடக்கத்தில் நாங்கள் சொல்வதையெல்லாம் அவர்கள் நம்ப மறுத்திருந்தார்கள். மறுத்திருந்த பொழுது அவர்களுடைய சித்திரவதை முறைகளைச் சொல்வார்கள், உண்மையைச் சொல்லாவிட்டால் இப்படியெல்லாம் நடக்கும் என்று. இர.சிறீகந்தராசா: எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறுங்கள்! து.வரதராசா: எங்களை அந்த இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போவதாகக் கூறுவார்கள்….
சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 04 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா
(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 03 இன் தொடர்ச்சி) [இனிவரும் பகுதிகளில் கொழும்பு நான்காம் மாடியில் தான் எதிர்கொண்ட இன்னல்களையும், தற்பொழுது புலம்பெயர் நாடுகளில் தான் மேற்கொண்டு வரும் பணிகளையும் விவரிக்கின்றார். தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட பெருங்கொடுமையான இன அழிப்பிற்குப் பன்னாட்டு நீதி உசாவலின் (விசாரணையின்) மூலமே தீர்வு கிட்ட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துவதோடு, உள்நாட்டு உசாவல் (விசாரணை) எந்தப் பயனையும் தராது என்பதையும் ஆணித்தரமாக எடுத்துக் கூறுகின்றார். ‘ஈழமுரசு’ இதழுக்காக அவரைச் செவ்வி கண்டவர் கலாநிதி இர.சிறீகந்தராசா.] இர.சிறீகந்தராசா: நீங்கள் கிளிநொச்சி தடுப்பு…
சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 03 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா
இர.சிறீகந்தராசா: நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கிளிநொச்சிக் கமுக்க (இரகசிய) முகாமில் உங்களிடம் என்ன விதமான கேள்விகள் கேட்கப்பட்டன? து.வரதராசா:: அங்கு வைத்து ஒரு கேள்வியும் என்னிடம் கேட்கப்படவில்லை. முதல் நாள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த என்னை அவர்களுடைய ஊர்தியில் வவுனியா மருத்துவமனைக்குப் பண்டுவத்துக்காக அனுப்புவதாகத்தான் கூறியிருந்தார்கள். அன்று இரவு கிளிநொச்சியில் இறக்கி விடப்பட்டேன். அடுத்த நாள் அவர்களுடைய பேருந்திலே கண்ணைக் கட்டி ஏற்றினார்கள். அதில் வேறு யாரும் இருந்தார்களா, எத்தனை பேர் இருந்தார்கள் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ஏற்றிய சிறிது நேரத்தில் திரும்பி…
சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 02 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா
சிங்கள வதைமுகாம் கமுக்கங்கள் – அம்பலப்படுத்துகிறார் மருத்துவர் து.வரதராசா! 2/6 இர.சிறீகந்தராசா: இந்த இறுதிப் போரிலே எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டார்கள், காணாமல் போகச் செய்யப்பட்டார்கள் என்கிற சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. ஆனால், “1,46,000 பேருக்கு என்ன நடந்தது எனத் தெரியாது” என்ற கருத்து மன்னார் மறை மாவட்ட ஆயர் அவர்களால் முன்வைக்கப்பட்டது. அதே நேரத்திலே, ஐக்கிய நாடுகள் அவை 40,000 பேர் இறந்தார்கள், 30,000 பேர் இறந்தார்கள் என்று சில இடங்களிலே கூறியது. நான் சென்ற ஓர் இடத்தில், ஐ.நா.,வின் முன்னாள் அலுவலர்…
சிங்கள வதைமுகாம் கொடுமைகள் – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா
சிங்கள வதைமுகாம் கமுக்கங்கள் – அம்பலப்படுத்துகிறார் மருத்துவர் து.வரதராசா! 1/6 நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழீழத் தாயகத்தில் மக்களோடு மக்களாக நின்று பெரும் எதிர்வுகளுக்கு(சவால்களுக்கு) மத்தியில் உயர்பெரும் மருத்துவச் சேவை புரிந்தவர் மருத்துவர் து.வரதராசா. தமிழீழத் தாயக மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்கிற உயரிய நோக்கத்திற்காக மருத்துவப் படிப்பை மேற்கொண்ட இவர், மருத்துவரானதும் அதனை நிறைவேற்றும் நோக்கத்துடன் மக்கள் மத்தியில் வாழ்ந்து மருத்துவப் பணி புரிந்தார். போர் வெடித்த பொழுது திருமலை ஈச்சிலம்பற்று முதல் வாகரை வரையான பகுதியில் மக்களின் உயிர் காக்க…