தீ மூட்டிய கவியரசே! புதுவை ஐயாவே! – ஈழம் இரஞ்சன்
தமிழீழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயாவிற்கு அறுபத்தேழாவது பிறந்தநாள் வாழ்த்துகள்! நள்ளிரவின் கீதத்தை நடுப்பகலின் கோபத்தை காட்டுக்குள் இருக்கும் வேங்கையை கவிதை எனச் சொல்லுக்குள் போட்டுத் தீ மூட்டிய கவியரசே! இன்று (திசம்பர் 3) உனக்குப் பிறந்த நாளாம்! தாயகப் புதல்லவர்களைச் சீராட்டி அவர்களின் வீரத்தை எடுத்துரைத்த ஆசானே! அறுபத்தேழை எட்டி விட்டாய் அகவைய ஒன்றால்… உன்னை அவ்வளவு எளிதாக எழுதி விட என்னால் முடியாது.. என் எழுதி(பேனா) முனையோ வன்னிப்பரப்பின் புழுதியில் மேடு பள்ளம் எல்லாம் சென்று நிதானம் இழந்து நடுக்கத்துடன்…
கருப்பு ஆடி, 32 ஆம் ஆண்டுத் துயர நினைவு, இலண்டன்
83ஆம் ஆண்டு இனப்படுகொலையின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் 10, தவுனிங்கு தெரு(Downing Street) முன்பாகப் பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. 1983 ஆம் ஆண்டு சூலை மாதம் 23 ஆம் நாள் இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 32 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஒரு மாபெரும் நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வொன்றினை, எதிர்வரும் ஆடி 07, 2046 / சூலை மாதம் 23 ஆம் நாள்…