தீ மூட்டிய கவியரசே! புதுவை ஐயாவே! – ஈழம் இரஞ்சன்
தமிழீழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயாவிற்கு அறுபத்தேழாவது பிறந்தநாள் வாழ்த்துகள்! நள்ளிரவின் கீதத்தை நடுப்பகலின் கோபத்தை காட்டுக்குள் இருக்கும் வேங்கையை கவிதை எனச் சொல்லுக்குள் போட்டுத் தீ மூட்டிய கவியரசே! இன்று (திசம்பர் 3) உனக்குப் பிறந்த நாளாம்! தாயகப் புதல்லவர்களைச் சீராட்டி அவர்களின் வீரத்தை எடுத்துரைத்த ஆசானே! அறுபத்தேழை எட்டி விட்டாய் அகவைய ஒன்றால்… உன்னை அவ்வளவு எளிதாக எழுதி விட என்னால் முடியாது.. என் எழுதி(பேனா) முனையோ வன்னிப்பரப்பின் புழுதியில் மேடு பள்ளம் எல்லாம் சென்று நிதானம் இழந்து நடுக்கத்துடன்…