ஈழத் தமிழரின் இரண்டு கால்களையும் உடைத்துக் காவல்துறையினர் வன்முறை வெறியாட்டம்!   சிங்கள இனவெறி அரசின் இனப்படுகொலைக்கு அஞ்சித் தாய்த் தமிழகம் நோக்கி ஏதிலியராய் வரும் தமிழீழ மக்கள், தமிழ்நாட்டில் துன்பங்களுக்கு ஆளாகும் கொடுஞ்செய்திகள் வந்தபடி உள்ளன.   கடந்த 06.03.2016 அன்று மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள உச்சப்பட்டித் தமிழீழ ஏதிலியர் முகாமில் அரசு அலுவலர்கள் ஆய்வு நடத்தச் சென்றபொழுது இரவீந்திரன் என்ற ஏதிலியர் தன் மகன் மதுரை அரசு மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டுச் சேர்க்கப்பட்டிருக்கும் தகவலைக் கூறியும் கூட அதை ஏற்க மறுத்த வருவாய்த்துறை அலுவலர் துரைப்பாண்டி என்பவரின் வன்பேச்சால் மனமுடைந்து தற்கொலை செய்து…