எழுவரை விடுதலை செய்தபின்னர் பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்
உச்சநீதிமன்றக் கருத்திற்கு இணங்க எழுவரை விடுதலை செய்தபின்னர் பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும் இராசீவு கொலைவழக்கில் சிக்க வைக்கப்படடவர்களுக்குத் தண்ட னையே வழங்கியிருக்கக்கூடாது. வழங்கிய பின்னரும் வழக்கு தொடர்பானவர்கள் முறையற்ற வழியில் இவர்கள் தண்டிக்கப்படடதைத் தெரிவித்த பின்னராவது எழுவரையும் விடுதலை செய்திருக்க வேண்டும். விடுதலைக்கான பல வாய்ப்புகள் வந்தபின்னரும் மத்தியஅரசு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறது. இராசீவு கொலை வழக்கில் சிக்கிய அப்பாவிகள் எழுவரையும் விடுதலை செய்வது மோசமான எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் அவர்கள் செய்தது ஒப்புமைப்படுத்த முடியாத…
கருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்! – இலக்குவனார் திருவள்ளுவன்
கருநாடகாவில் கருதியது நடந்தது: எடியூரப்பா விலகல்! 15 நாள் கால வாய்ப்பில் ச.ம.உ.களை வாங்கி ஆட்சியைச் சிக்கலின்றி அமைக்கலாம் எனப் பாசக திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் 24 மணி நேர வாய்ப்பே அளித்தமையால் பேர வணிகத்திற்கு வாய்ப்பில்லாமல் போனது. இச்சூழலை எதிர்பார்த்தே எடியூரப்பா விலக வேண்டும் என நேற்று குறிப்பிட்டிருந்தோம்,( எடியூரப்பா, கருநாடக ஆளுநர், நரேந்திரர் ஆகியோர் பதவி விலக வேண்டும். ) மோசமான தோல்வியை வெளிப்படுத்துவதை விட விலகுவதே மேல் எனக் குறுக்கு வழியில் கருநாடகாவின் முதல்வராகப் பொறுப்பேற்ற…
காவிரி வழக்கு: நீதி வழங்கவில்லை என்றால் போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும்! – பெ. மணியரசன்
காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றம் உரிய நீதி வழங்கவில்லை என்றால் தமிழ்நாட்டுப் போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை! உச்ச நீதிமன்றத்தில் ஐப்பசி 02,2047 / 18.10.2016 அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட ஆணையிடக் கூடாது என்றும், நாடாளுமன்றம்தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்திட உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாது என்றும் இந்திய அரசு வாதிட்டுள்ளது. இந்த வாதங்கள், தமிழ்நாட்டுக்குக் காவிரி…
காவிரித் தீர்ப்பு : காங்கிரசு – பா.ச.க. தலைமைகள் தமிழர்களுக்கு வஞ்சகம்!
காவிரித் தீர்ப்பு : காங்கிரசு – பா.ச.க. தலைமைகள் தமிழர்களுக்கு வஞ்சகம்! தமிழ்நாடு முதல்வர் உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை! உச்ச நீதிமன்றம் 20.09.2016 அன்று வழங்கியத் தீர்ப்பில், இந்திய அரசு ஒரு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று காலவரம்பு விதித்தும், 21.09.2016 முதல் 27.09.2016 வரை நொடிக்கு 6,000 கன அடி காவிரி நீரைக் கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டுமென்றும் கட்டளையிட்டுள்ளது. நேற்று (21.09.2016)…
மனச்சான்று உள்ளவர்கள் விடை சொல்லட்டும்! பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி!- பாகம் – 10
(பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி: பாகம் – 09 தொடர்ச்சி) மனச்சான்று உள்ளவர்கள் விடை சொல்லட்டும்! பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி!- பாகம் – 10 வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது! சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது இந்திய அரசியல்யாப்பின் பிரிவு 14. உண்மையில் சட்டம் அனைவருக்கும் பொதுவானதுதானா என்பது, சாமான்ய இந்தியனின் கேள்வியாக எப்போதுமே இருந்து வருகிறது. மறைந்த மனித உரிமைப் போராளியும்…
கேட்பது உயிர் பிச்சையல்ல, மறுக்கப்பட்ட நீதி! பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி: பாகம் – 09
(பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! பாகம் – 08 தொடர்ச்சி) கேட்பது உயிர் பிச்சையல்ல, மறுக்கப்பட்ட நீதி! பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி: பாகம் – 09 (வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!) “கேட்பது உயிர் பிச்சையல்ல… மறுக்கப்பட்ட நீதி” என்பதே எனது 25 ஆண்டுகால முழக்கமாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் எனது தண்டனையை உறுதி செய்த பின்பும் அதுவே எனது போராட்டமாக இருந்து…
மறக்க முடியாத அந்த நாள் 17.5.1999.: பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! பாகம் – 08
(பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி! – பாகம் – 07 தொடர்ச்சி) மறக்க முடியாத அந்த நாள் 17.5.1999.: பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! பாகம் – 08 (வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!) ‘மரணம்’ – ஒவ்வொரு மனிதனும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத் தருணம் என்பதை அறிவேன். ஆனால், வாழ்வைத் தொடங்கும் முன்பே திடீரென ஒரு நாள் அது என் முன்பு…
உயர்நீதி மன்றத்தின் பெயர் சென்னை அல்ல… தமிழ்நாடு – இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை அல்ல … தமிழ்நாடு – இலக்குவனார் திருவள்ளுவன் . சென்னை மாகாணம், மதராசு என்னும் பெயரில் வழங்கப்பட்ட பொழுது சென்னையில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது. 1862 இல் இது மதராசு உயர்நீதிமன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பேரறிஞர் அண்ணா அவர்களால், 1968 சூலை 18 இல் சென்னை மாநிலத்தைத் ‘தமிழ்நாடு’ ஆகப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 23.11.1968 இல் தமிழ்நாடு பெயர் மாற்ற வரைவு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அப்பொழுதே உயர்நீதிமன்றத்தின் பெயர் ‘தமிழ்நாடு உயர்நீதி மன்றம்’ என மாற்றப்பட்டிருக்க…
குதிரை குப்புறத் தள்ளியதும் இல்லாமல் குழியும் பறித்துவிட்டது!: கருணாநிதி
குதிரை குப்புறத் தள்ளியதும் இல்லாமல் குழியும் பறித்துவிட்டது! கலைஞர் மு.கருணாநிதி ” ‘தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி ஆகும்’ என்று இலக்கணம் வகுக்கப்பட்டிருந்தாலும் இலங்கையின் ஆதிக் குடி மக்களான ஈழத் தமிழர்களுக்குத் தொடர்ந்து இழைக்கப்பட்டு வந்த எண்ணிலடங்காத கொடுமைகளுக்கும், இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றுக்கும் தாமதமாகவேனும் நீதியும் நியாயமும் கிடைக்குமென்று உலகத் தமிழர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், திகைப்புத் தரும் விதமாக அமைந்திருக்கிறது ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் நேற்று (௨-௧௦-௨௦௧௫ ) நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம். அதில், அமெரிக்கா…
செய்திக்குறிப்புகள் சில பங்குனி 2,2045, மார்.16, 2014
புதுதில்லி : வீரப்பன் கூட்டாளிகள் முதலான 15 பேரின் தூக்குத் தண்டனை, ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டதை எதிர்த்து, மத்திய அரசு அளித்த மறு சீராய்வுமுறையீட்டை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இராசீவு வழக்கில் பொய்யாகச் சேர்க்கப்பட்டுப் பழிவாங்கப்படுவோரின் விடுதலையை நிறுத்துவதற்காக மத்திய அரசு போட்ட நாடகம் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. இனப்படுகோலைப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் நிலை மோசமாக உள்ளது என்றும் தமிழர்களின் உரிமைப் போரைச் சிங்களவர்களுடன் போராட்டங்களுடன் ஒப்பிட முடியாது என்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளரான நிமல்கா பெர்னாண்டோ, ‘தமிழ் இந்து’ நாளிதழ்ச் செவ்வியில்…