வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 10. உடம்பை வளர்த்தல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 9. தொடர்ச்சி) 10. உடம்பை வளர்த்தல் உடம்பெலாஞ் செய்யு மொப்பிலாக் கருவி. உடல் என்பது எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒப்பற்ற கருவி ஆகும். உடம்பை வளர்த்தலஃ துரமுறச் செய்தல். உடம்பை வளர்த்தல் என்பது உடலை வலிமை உடையதாக மாற்றுவது ஆகும். உடம்புநல் லுரமுறி னுலகெலா மெய்தும். உடல் நல்ல வலிமை பெற்றால் உலகம் முழுவதையும் வெற்றி கொள்ளும். உரனிலா வுடம்பு வரனிலா மங்கை. வலிமையற்ற உடல் என்பது வாழ்க்கைத் துணையற்ற வாழ்வு போன்றது. உளந்தொழில் செயற்கு முடலுரம்…