தமிழக வரலாறு 2/5 – மா.இராசமாணிக்கனார்
(தமிழக வரலாறு 1/5 – மா.இராசமாணிக்கனார் : தொடர்ச்சி) தமிழக வரலாறு 2/5 ஆட்சி முறை சங்கக் காலத்தில் நாட்டை ஆட்சிபுரிவதில் அரசனுக்கு உதவியாக ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் இருந்தன. பிற்காலத்தில் பலதுறை அமைச்சர்களும் பலதுறை அலுவலர்களும் இருந்தனர் என்பது கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது. அரசனுடனிருந்து ஆட்சி முறைகளைக் கவனித்த அமைச்சர்கள், ‘உடன் கூட்டத்து அதிகாரிகள்’ எனப்பட்டார்கள். நாடு பல மண்டலங்களாகவும், மண்டலம் வளநாடு, நாடு, கூற்றம், சிற்றுார் என்றும் பலவாறு பிரிக்கப்பட்டிருந்தன. ஊராட்சி ஒவ்வோர் ஊரும் ஊரவையார் ஆட்சியில் இருந்தது. ஒவ்வோர் ஊரும்…