உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை ஏற்காததால் தமிழகத்தைப் பழிவாங்குவதா? – சீமான்
உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை ஏற்காததால் தமிழகத்திற்கு வழங்கும் அரிசியின் விலையை உயர்த்திப் பழிவாங்குவதா? – மத்திய அரசுக்குச் சீமான் கண்டனம்! இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஒட்டுமொத்தத் தமிழகமும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் சற்றும் சலனமில்லாது தமிழர்களுக்கு இன்னொரு வஞ்சகத்தை இழைக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளும் மோடி அரசு. மத்திய அரசின் உணவுப்பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது தமிழகமும், கேரளாவும் மட்டும்தான் அதனை ஏற்க மறுத்தன. இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு…