கலைச்சொல் தெளிவோம்! 91. உணவு வெருளி-Sitophobia
91. உணவு வெருளி-Sitophobia முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின் (பெரும்பாண் ஆற்றுப்படை : 246) சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர் (அகநானூறு : 283.5) பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்ட (மதுரைக் காஞ்சி : 660) வலிக் கூட்டு உணவின் வாள்குடிப் பிறந்த (பெரும்பாண் ஆற்றுப்படை : 137) ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும், (பட்டினப் பாலை : 191) சிறு புல் உணவு, நெறி பட மறுகி, (அகநானூறு : 377.2) உண்டி கொடுத்தோர்…