தன்மதிப்புப் பகுத்தறிவாளர் சிவகங்கை இராமச்சந்திரன் – செங்கோ
தன்மதிப்புப் பகுத்தறிவாளர் சிவகங்கை இராமச்சந்திரன் மருதிருவர் மண்ணிலே… சிவகங்கை இராமச்சந்திரன் (புரட்டாசி 02, 1915)16.09.1884இல் பிறந்து (மாசி 15, 1964)26.02.1933 இல் மறைந்த திராவிடர் இயக்கத் தன்மதிப்புப் பகுத்தறிவாளர். 1929இல் செங்கற்பட்டு மாநில தன்மதிப்பு(சுயமரியாதை) இயக்க மாநாட்டில் பங்கு பெற்று, பெரியார் பாதையில் தம் சாதி ஒட்டினை நீக்கி, “சிவகங்கை இராமச்சந்திரன் சேர்வை ஆகிய நான், இன்றுமுதல் சிவகங்கை இராமச்சந்திரன் என்றே அழைக்கப்படுவேன்” என்று சூளுரைத்துச் சாதியைத் துறந்தவர். ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட பெருந்தகையாளர். இரவுநேரப் பள்ளிகளைத் தொடங்கி, அந்த உழைக்கும்…