இயன்றவரை உதவுங்கள்!
இயன்றவரை உதவுங்கள்! இனப்படுகொலைப்போரில் இந்த உடன்பிறந்தாளுக்கு ஓர் ஆண், ஓரு பெண் என இரு குழந்தைகள் . இவருக்குத் தற்போது உதவி தேவை தன்னால் சொந்தமாக ஒரு தொழில் செய்யமுடியும் எனவும், தனக்கு ஆடு வளர்ப்பு செய்ய பணம் தேவை எனவும் பண உதவி செய்ய யாரும் முன் வந்தால் தன் இரு குழந்தைகளையும். தன்னால் நல்ல கல்வி கொடுத்து வளர்த்து எடுக்க முடியும் என்றும் தெரிவித்து உதவி வேண்டுகிறார். உதவும் உள்ளங்கள் உதவுங்கள்! தொடர்பு இலக்கம்:-009477 549 9988 சிறீகாந்த சீவா கிளிநொச்சி…
துபாயில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு உதவிட வேண்டுகோள்
துபாயில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு உதவிட வேண்டுகோள் ! துபாய் : மதுரை மாவட்டம் நத்தம் அருகேயுள்ள சிற்றூரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் துபாயில் பொருளூர்தி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாய் செபல் அலி (Jebel Ali) பகுதியில் ஏற்படுத்திய நேர்ச்சியின்(விபத்தின்)போது கேரளாவைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்தார். இந்த நேர்ச்சியை ஏற்படுத்தியதற்காக நூறாயிரம் திர்ஃகாம் மரணமடைந்தவரின் குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நேர்ச்சியில் தொடர்புடையவருக்குக் காப்பீட்டு நிறுவனம் சில காரணங்களைக் கூறி இழப்பீடு வழங்க மறுத்து…
வட்டுக்கோட்டை இளைஞர்கள் இல்ல மாணாக்கர்களுக்கு உதவி
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்கு 50 உடைப்பெட்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இனிய வாழ்வு இல்லத்தின் நிருவாகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இல்ல மாற்றுத்திறனாளி மாணவர்களான விழிப்புலனற்றோர், செவிப்புலனற்றோர் வாய்பேச முடியாதவர்கள் என 50 இல்லச் சிறார்களுக்கு உரூபா 65000 பெறுமதியான 50 உடைப்பெட்டிகள் அன்பளிப்பாக வழங்கபட்டன. அத்துடன் இல்லச் சிறார்களுக்கு சிறப்பு நண்பகல் உணவும் வழங்கபட்டது. [படங்களைப் பெரிதாகக் காண அழுத்திப்பார்க்கவும்!]
துயரீடுகள் வழங்குவதில் அ.தி.மு.க அரசு மெத்தனம் – தாலின் குற்றச்சாட்டு!
ஒட்டிகள் ஒட்டுவதில் காட்டும் அக்கறையைப் பொருள்கள் வழங்குவதில் காட்ட வேண்டும்! கும்மிடிப்பூண்டியில் ஏறத்தாழ உரூ. 10 இலட்சம் மதிப்புள்ள துயரீட்டு உதவிகளை வழங்க வந்த தி.மு.க பொருளாளர் மு.க..தாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துயரீடுகள் வழங்குவதில் அ.தி.மு.க அரசு மெத்தனம் காட்டுவதாகக் குற்றம் சாட்டினார். திருவள்ளூர் வடக்கு மாவட்டத் தி.மு.க சார்பில் கும்மிடிப்பூண்டி வட்டத்திலுள்ள 61 ஊராட்சிகளைச் சேர்ந்த 81ஊர்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000பேர்களுக்கு மழை வெள்ளத்துயரீடுகள் வழங்கப்படும் நிகழ்வு கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி…
‘மறுமலர்ச்சி’ இயக்குநர் பாரதிக்கு மறுமலர்ச்சி அளியுங்கள்!
காட்டுமன்னார்கோவில் அருகே வாழ்ந்து மறைந்த வள்ளல் இராசு(படையாட்சி). அவரது வரலாற்றை மையமாக வைத்து ‘மறுமலர்ச்சி’ என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ்நாட்டிற்கு அந்த வரலாற்றை அறியத்தந்தவர் இயக்குநர் பாரதி.. அதன்பிறகு சில திரைப்படங்களை அவர் இயக்கினாலும் கூட மறுமலர்ச்சி எட்டிய வெற்றியை அவற்றால் எட்ட முடியவில்லை.. தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ள முதல் திரைப்படம் “தில்லானா மோகனாம்பாள்” அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது “மறுமலர்ச்சி” இதுவே இத்திரைப்படத்தின் சிறப்பை வெளிப்படுத்தும். இயக்குநர் பாரதி இதுவரை தான் சம்பாதித்த எதையுமே தனக்கென்று சேர்த்துக்கொள்ளாமல் ஏழை…