14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015
மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூரில் மே 30, 31 & சூன்1 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மையாகக் கொடுக்கப்படும். இவ்வகையில் 2015ஆம் வருடம் நடக்கவிருக்கும் இம்மாநாட்டிற்குக் “கணினிவழிக் கற்றல் கற்பித்தல், இயல்மொழியாய்வு, செல்பேசித் தொழில்நுட்பம்” ஆகியவை முதன்மைத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்குறிப்பிடும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் தங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். v இயல்மொழிப்…
13ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு
புரட்டாசி 3, 4, 5, 2045 / 2014 செப்டம்பர் 19, 20, 21 புதுச்சேரி
உத்தமம் தலைவர் முனைவர் வாசு ரெங்கநாதன் தமிழகத்தில்
உத்தமம்(INFITT) எனச் சுருக்கமாக அழைக்கப் பெறும் உலகத்தமிழ்த்தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் 13 ஆவது தமிழ் இணைய மாநாடு வரும் புரட்டாசி 3-5, 2045 /செப்தம்பர் 10-21.2014 ஆகிய நாள்களில் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இது குறித்து முன்னேற்பாடுகளைப் பார்க்கவும் உத்தம உறுப்பினர்களுடன் கலந்துரையாடவும் இதன்தலைவர் முனைவர் வாசுரெங்கநாதன் தமிழ்நாடு வந்துள்ளார். புதுச்சேரிக்கும் செல்கிறார். ஆனி 07, 2045 / 21.06.14 அன்று சென்னையில் அவர் கருத்தறிவு நிகழ்ச்சி நடந்த பொழுது எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்கள். இதில் மலேசியாவில் இருந்து – 12 ஆவது…
13 ஆவது தமிழ் இணைய மாநாடு – கட்டுரைகள் பற்றியஅறிவிப்பு
13 ஆவது தமிழ் இணைய மாநாடு கட்டுரைகள், ஆய்வுச்சுருக்கங்கள் அனுப்புவதற்கான அறிவிப்பு உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) நடத்தும் 13 ஆவது தமிழ் இணைய மாநாடு 2014 புதுச்சேரியில் செப்டம்பர் மாதம் 19-21 நாள்களில் நடைபெற உள்ளன. புதுவை பல்கலைக்கழகம், புதுவை தமிழ்ச் சங்கம், புதுவை மொழியியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம், பல்லவன் கல்வி நிறுவனங்கள், இந்திய மொழிகளுக்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து உத்தமம் இம்மாநாட்டை நடத்த உள்ளது. 2014 மாநாட்டிற்குத்…