உன்னிதழில் என் சொற்கள்!   உன்காட்டு முட்களினால் பாதந் தோறும் உண்டாகும் பரவசத்தை என்ன வென்பேன்! உன்னம்பு  துளைக்கின்ற இதயத் திற்குள் உயிர்க்கின்ற காதலினை என்ன  வென்பேன்! உன்மூலம் வருகின்ற மரணம் என்றால் உயிர்கசிய வரவேற்றுப் பாட்டி சைப்பேன்! இன்னும்நீ வெறுமையினைக் கொடுப்பா யானால் என்னுலகை நலமாக முடித்துக் கொள்வேன்!   வரையாத சித்திரமாய் வந்தாய்; எந்தன் வாழ்வினது சுவரெல்லாம் ஒளிரு கின்றாய்! கரையோரம் கதைபேசும் அலைகள் போலக் கச்சிதமாய் உயிர்ப்பாகப் பேசு கின்றாய்! அரைஉயிராய்க் கிடக்கின்ற போதும்; என்னை அரைநொடிநீ நினைத்தாலும் பிழைத்துக்…