குணக்குன்றர் குருமூர்த்தி வாழ்க நூறாண்டு! – இலக்குவனார் திருவள்ளுவன்
குணக்குன்றர் குருமூர்த்தி வாழ்க நூறாண்டு! பதிப்பகங்கள், பணப்பெருக்கத்தை நோக்கமாகக் கொண்டும் செயல்படலாம். எனினும் தொடக்கக்காலப் பதிப்பகங்கள் இலக்கியப்பணிகளுக்கே முதன்மை யளித்தன. பழைய இலக்கியங்களையும் புதிய இலக்கியங்களையும் புலவர்களையும் இலக்கியவாணர்களையும் கவிஞர்களையும் கட்டுரையாளர்களையும் நூலாசிரியர்களையும் மக்களுக்கு அறிமுகப் படுத்துவன பதிப்பகங்களே! இலக்கியங்களின் தொடர்ச்சிக்குப் பாலமாகச் செயல்படுவன பதிப்பகங்களே! அத்தகைய பதிப்பகங்களில் குறிப்பிடத்தக்க சிறப்புடையது மணிவாசகர் பதிப்பகம். சீர்மிகு மணிவாசகர் பதிப்பகத்தில் ஒருவர் 40 ஆண்டுகளாகப் பணியாற்றுகின்றார் எனில், மிகச்சிறந்த இலக்கியத் தொண்டினைத் தொய்வின்றி ஆற்றுவதாகத்தானே பொருள்! அததகைய அருந்திறலாளர் குணக்குன்றர் இராம.குருமூர்த்தி ஆவார். …