தமிழில் வாதாடியதால் வழக்கைத் தள்ளுபடி செய்வதா? – இராமதாசு கண்டனம்  உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையில் தமிழில் வாதாடியதால் வழக்கைத் தள்ளுபடி செய்வதா? என்று  மரு.இராமதாசு அறிக்கை வழி வினா எழுப்பிக் கண்டித்ததுள்ளார். பா.ம.க நிறுவனர்  மரு.இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-   மக்கள் நலனுக்காக எத்தனையோ சிறப்பான தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை  விந்தையான தீர்ப்பை அளித்திருக்கிறது. பொதுநலன் சார்ந்த வழக்கில் வழக்கறிஞர் இல்லாமல் வாதிட்ட  முறையீட்டாளர் தமது தரப்பு வாதுரையைத் தமிழில் கூறியதை ஏற்க முடியாது எனக்…