கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 15 & 16
(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 13 & 14 தொடர்ச்சி) திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 15 & 16 பதினைந்தாம் பாசுரம் தமிழே பிற உயிரினங்களிலும் ஐவண்ணப் பைங்கிளிபோல் ஐம்மிளிரும் நாயகியாள் ! தூவிறகு அன்னம்போல் தன்சொல் பிரித்துயர்வாள் ! ஓவியக்கண் பீலிப்புள் ஒய்யாரம் காட்டுதல்போல் மேவும் சபைதன்னில் மேதைமை செய்திடுவாள் ! மாவரசு சிங்கம்போல் மேலாண்மை கூடியவள் ! மூவாத ஆல்போல் மண்ணுள் விழுதூன்றிப் பாவாணர் போற்றப் பரந்துவிரிந் தோங்கிடுவாள் ! நாவால் தமிழன்னை நற்புகழ்சொல் எம்பாவாய் ! பதினாறாம் பாசுரம்…
திருவள்ளுவரின் உயிரியல் பார்வைத் திறன்-குறளேந்தி ந.சேகர்
திருவள்ளுவரின் உயிரியல் பார்வைத் திறன் தமிழ் மொழியில் தோன்றிய இலக்கியச் செல்வங்களுள் தலை சிறந்தது திருக்குறள். தமிழரே அல்லாமல் அயலவரும் உரிமை பாராட்டிப் பயன் எய்துதற்கு மிக்க துணையாவது இந்நூல். தான் தோன்றிய நாள் முதல் தலைமுறை தலைமுறையாக எத்தனையோ நாட்டவரும், மரபினரும், மொழியினரும், சமயத்தினரும் நுகர்ந்து பயன் பெறுமாறு செய்தும் அழியாச் செல்வமாகத் திகழ்வது திருக்குறள் ஒன்றே ஆகும். இது சான்றாண்மை நிறைந்த அரும் பெரும் புலவர் பெருமானார் என உலகில் உள்ள எல்லா மொழிப் புலவர்களாலும் சிறப்பித்துப் பாராட்டப்பெறும்…