ஒளிப்பதிவும் மொழிப்பதிவும் ஊடாடும் தங்கர் பச்சான் கதைகள் – பிரேம்
தங்கர் பச்சான் கதைகள் பின்னட்டைக் குறிப்பு செம்புலம் எனத் தன் மண்ணைக் கொண்டாடி மகிழும் தங்கர் பச்சான், மண்ணைவிட்டு வெளியேறி வாழ நேர்ந்துவிட்ட மனங்களின் மொழியில் பேசுபவர். இலக்கியத்தின் மொழியும் காட்சியின் மொழியும் ஊடாடும் பரப்பில் இழப்புகளின் கதைகளைச் சொல்கிறவர். மனது கனக்கக் காட்சிப்படுத்தும் மனிதர்களும் விலங்குகளும் செடிகளும் மரங்களும் நிறைந்தது தங்கர் பச்சானின் உலகம். அவை இல்லாமல் போகும் ஓர் உலகம் பற்றிய அச்சமும் வலியும் படிந்த கதைகளும் காட்சிகளும் அவரை மண்சார்ந்த கலைஞராக வைத்திருக்கின்றன. மரபைப் பற்றிய ஏக்கம்,…