கைது செய்தவர் சொல்கிறார்…உசாவல்(விசாரணை) அதிகாரிகள் சொல்கிறார்கள்.. தீர்ப்பளித்த நீதிபதி சொல்கிறார்.. உண்மை அறியும் குழு, நீதிமன்றம் நியமித்த  செயின்ஆணையம் சொல்கின்றன, இவர்கள் ‘ குற்றமற்றவர்கள்(நிரபராதிகள்)’என்று! மனித உரிமை ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.. ஊடகவியலாளர்கள் சொல்கிறார்கள்… நீதிபதிகள் சொல்கிறார்கள்.. மக்கள்நாயக  ஆற்றல்கள், அரசியல் கட்சிகள், முற்போக்கு இயக்கங்கள் எல்லாரும் ஒரே குரலில் சொல்கிறார்கள், இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று! எதுவும் எங்களுக்குத் தேவையில்லை.. என்று திமிர்த்தனமாக இவர்களின் உயிர்பறிக்க துடிக்கிறது இந்தியா! காங்கிரசோ,  பா.ச.க.வோ கெசுரிவாலோ யாராயினும் ஏழுதமிழர் விடுதலை செய்யக்கூடாது என்னும் அவர்கள் நிலையில்…