(தோழர் தியாகு எழுதுகிறார் 218 : அறிவும் அறமும் மக்கள் பக்கம் நிற்பதற்கே!- தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார்உரிமைத் தொகை உண்டு! உரிமைக் கல்வி கிடையாதா? இனிய அன்பர்களே! கல்வி பெறுவது மக்கள் உரிமை! கல்வி தருவது அரசின் கடமை! என்பது கல்வி உரிமையை வலியுறுத்துகிற நாம் தரும் முழக்கம். ஒரு சிலர் கேட்கின்றனர்: அரசினால் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி தர முடியுமா? இது கட்டுப்படியாகுமா? என்று சிலர் கேட்கின்றனர்: அரசின் நிதி நிலைக்கு இது சரிப்படுமா? வரவுக்கு மேல் எப்படிச் செலவு செய்ய…