தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 14/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 13/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி: 14/17 தமிழ்க்கிளர்ச்சி தனைவிரும்பித் தமிழ்மறவர் சிலர்முன்புதமிழ்தமிழ்செந் தமிழென்று தவித்தார்கள் அம்மானைதமிழ்தமிழ்செந் தமிழென்று தவித்தவரைக் கொடியசிலதமிழரே தண்டித்து வெறுத்தனர் அம்மானைவெறுத்தோர் எலாம்இன்று விரும்புகின்றார் அம்மானை       (66) உரிமை இனியும் தமிழர்கள் ஏமாற இயலாதால்தனியாக தமிழர்க்குத் தரவேண்டும் அம்மானைதனியாக தமிழர்க்குத் தரவேண்டின் இணைந்துள்ளஇனியநல் இந்தியத்தை எதிர்ப்பதாமே அம்மானைஎதிர்க்காது தமிழுரிமை ஈயக்கேள் அம்மானை       (67) தண்ணியசெந் தமிழ்நாடு தமிழர்க்கே அம்மானைதண்ணியசெந் தமிழ்நாடு தமிழர்க்கே யாமாயின்நண்ணு…

சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை ! – பாவலர் கருமலைத்தமிழாழன்

சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை ! நீருக்குள் நிழல்தன்னைத் தேடல் போன்று நீர்த்துபோன அரசியலில் நியாயந் தன்னைப் பாருக்குள் கிடைக்குமென்று தேடு கின்றார் பரிதாப ஈழத்துத் தமிழ ரின்று ! வேருக்கு நீருற்றி ஐ.நா மன்றம் வேதனையைத் தீர்த்துவிடும் என்றி ருந்தால் பேருக்குத் தீர்மானம் போட்டோ மென்றே பெயர்த்திட்டார் நம்பிக்கை திட்ட மிட்டே ! பால்தருவார் பசிக்கென்று காத்தி ருக்கும் பச்சிளமைக் குழந்தைகள்போல் ஈழ மக்கள் ஆல்போன்று மன்றம்தாம் நிழலைத் தந்தே அநீதிக்குத் தண்டனைகள் வழங்கு மென்று கால்கடுக்க ஏக்கத்தில் நின்றி ருந்தால் கள்ளிப்பால்…

தனித்தமிழ்நாடு இயலும் – சிவா அய்யாதுரை நேரலை உரை

சிவா அய்யாதுரை – தமிழ்நாடு தனி நாட்டிற்கான முதல் இணையத்தள நேரலை உரை – தமிழாக்கம்   இந்திய நேரப்படி 05-சூன்-2014 இரவு 9.30 மணிக்கு  அவரது நேரலைஉரை தொடங்கியது. இந்த நேரலையின் தொடக்கம் முதல் இறுதி வரை அவர் முழுதும் ஆங்கிலத்திலேயே அவரது உரையை தொடர்ந்தார். அதனால் எல்லா தமிழர்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக நாம் இதை மொழியாக்கம் செய்து இங்கு பதிவிட்டுள்ளோம். அவரது இந்த நேரலை நிகழ்ச்சியானது இரு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பாதி அவரது தமிழ்நாடு தனிநாடு என்பதற்கான  தேவையையும்…

உரிமை ! – ஈரோடு இறைவன்

விலங்கு வாழ்கிறது காட்டில் விடுதலையோடு! மீன் தண்ணீரில் வாழ்கிறது விடுதலையோடு ! புழு மண்ணில் வாழ்கிறது விடுதலையோடு ! தமிழா நீ வாழ்கிறாயா விடுதலையோடு !