தலைவன் தேரின் ஒலி வருகையே புத்தாண்டு வருகை – உருத்திரா இ பரமசிவன்
தலைவன் தேரின் ஒலி வருகையே புத்தாண்டு வருகை கல் பொருதிறங்கும் மல்லல் யாறு புல் தடவி பூக்கள் வருடி நறவம் தூஉய் பல்லிணர்ப் பரவி வள்ளி படர்ந்த வளமண் பொள்ளி புடை யுடுத்த மன்றுகள் ஆக்கி வேங்கை படுத்த வேங்கை வெரூஉய் பெயரும் காட்சியும் மலியும். அற்றை வானின் அகல்வாய் திங்கள் ஒளியுமிழ் காலை வருவாய் என்ன விழிஅவிழ் குவளை விரியாநின்று நோதல் யான் உற்றது அறிவையோ வாடிய காந்தள் அன்ன ஊழியும் கொடுவிரல் நுடங்கி வீழ்ந்ததும் அறிவையோ. வளி அவி அடவி…
முருங்கை மரத்து வேதாளம் ! – உருத்திரா இ பரமசிவன்
முருங்கை மரத்து வேதாளம் ! வாழ்க்கை வாழ்வதற்கே ! வாழ்க்கை என்பது முருங்கை மரத்து வேதாளம் என்று வெட்டி வெட்டி எறிந்தாலும் நம் தோள்மீது அது ஏறிக்கொண்டே தான் இருக்கும். வாழ்க்கையை வெறுப்பது என்பது தான் அந்த வேதாளம். வாழ்க்கையை நோக்கி வரவேற்பு புன்னகை ஒன்றை வீசு எல்லா வேதாளங்களும் அணுக முடியாமல் ஓடியே போய்விடும். இப்போது எல்லா வேதாளங்களும் உன் காலடியில். உருத்திரா இ பரமசிவன்