தமிழ் மட்டும் தானே! – உருத்திரா
தமிழ் மட்டும் தானே! நம்பிக்கை கொள்! அது உன்னுள் ஆயிரம் யானைகள் பிளிறும் குரல்! அச்சம் அகற்று! அதுவே உன் விரல்நுனியில் ஒரு விடியல். உள்ளம் பிழிதல் தவிர்த்து விடு! அதுவே வழியிடறும் பாறைகள் தவிடு பொடியாக்கும். இதயம் துடிக்கும் போது உணர்ச்சியை இளக்கமாய் ஆக்கி இறுக்கமாய் உடுத்திக்கொள்! தளர்வுகள் ஏதும் தலை காட்டாது ஓடும். சொற்கள் தோறும் கற்கள் பிளந்து உறுதியைக்காட்டு! இமயங்கள் கூடத் தன் மகுடங்கள் இழந்து மண்டியிடும் அறிவாய்! மனிதா!மனிதா! மந்திரம் சொல்லி உனை மடக்கும் மொழியை உடைக்கும் ஓரொலி…