விரலில் வைக்கும் புள்ளியே விடிவெள்ளியாகும்! – உருத்ரா
விரலில் வைக்கும் புள்ளியே விடிவெள்ளியாகும்! நாட்கள் நெருங்கி விட்டனவே. அறிவு மிகுந்தோர் சிந்தனை செய்வீர். உள்ளம் உடையார் வெள்ளமெனப் பெருகுவீர். உணர்வு கேட்கும் வெளிச்சம் காண இருள் மறைப்புகள் விலக்குவீர் விலக்குவீர். பொருளாய் பணமாய்ப் பாதை தடுக்கும் பாதகம் மறுப்பீர். தாயின் மணிக்கொடி பேய்களின் கையிலா? மக்கள் தத்துவம் மறைந்து போக தனிமனிதப் புள்ளிகள் நம்முள் பூதமாய் இங்கு நிழல்கள் காட்டும். பொது சமுதாயப் புனிதம் காக்க கோவிலும் வேண்டா கடவுளும் வேண்டா! சாதியும் வேண்டா சதிகளும் வேண்டா! உழைக்கும் ஒவ்வொரு கரத்திலும் காண்பீர்…
விடியல் பரிதி – உருத்ரா
உழவத்தமிழா! விடியல் பரிதி நீயே! விசும்பின் துளிபெய்து வியன் நிலம் கீறி மெய் வருத்தம் உரம் சேர்த்து கனலும் கதிரொடு தன் புனல் இழைத்து காய்நெல் அறுத்துக் கழனி வளம் ஆக்கி ஊஞ்சல் ஞாலம் தன் உயிரீந்து ஆட்டி. ஓங்கலிடையே தமிழின் ஒளியாய் உலகு புரக்கும் உழவத்தமிழா! உனை உறிஞ்சும் தும்பிகள் உலா வந்திடும் கள்ளம் அறிதி! உள்ளம் தெளிதி! யானை புக்க புலம் போல நம் கவளமும் சிதறி வளங்களும் அழிந்து நிகழ்தரு வல்லிய கொடுமைகள் அகல எழுவாய்!எழுவாய்! எழுதரும் கனலியே…
பாளமாய் ஆனதே நேபாளம்! – உருத்ரா
மலை மடிப்புக்குள்ளிருந்தும் மண் பாம்பின் சீற்றமா? பாளம் பாளமாய் ஆனதே நேபாளம். நசுங்கிய உடல்கள் திண்காரைப் பிணங்களாய் என்னே அவலம்!. செங்கல் நொறுங்கிய குவியல்களில் தொன்மைப்படிவங்களும் தொலைந்து கிடக்கின்றன. குரல்கள் அவிழ்க்கும் முன் உயிர்ப்பூக்கள் கூழாய்ப்போயின. ஊழிக்கூத்தின் உடுக்கைகள் கோவில்களில் அதிர்ந்து காட்டிய போதெலாம் கண்களில் ஒற்றிக்கொண்டோமே ஒத்திகை தான் அது என இன்று காட்டினானோ அந்த சிவன். எண்ணிக்கை தெரியாத குற்றமல்ல. கிடைக்கின்ற கைகளும் கால்களும் முழுக்கணக்கு காட்டும்போது நம் மூச்சடங்கி அல்லவா போகிறது பெரும் அதிர்ச்சியில். அந்த மக்களுக்கு நாம் தோள்…
வெங்கதிர் நிலவும் வெள்நள் ஆறும் – உருத்ரா
சொல் காப்பியம் : அன்றும் இன்றும் “ஞெமலி மகிழ்தரு” என்ற சொல்லை ஆக்கி இச்செய்யுளை நான் எழுதியமைக்கு 01.12.2014 அன்று ஒரு நடு இரவில் படித்த “அகநானூற்றுப்பாடல்” (மணிமிடைபவளம்)தான் கரு. அதில் “மகிழ்” என்ற சொல் நாய் குரைத்தலை குறித்தது.கூரிய பற்களை உடைய நாய் “மகிழ”த் (குரைக்க) தொடங்கியதைப் புலவர் வெகு நுட்பத்துடன் எழுதியிருந்தார். அப்போது தான் என் ஐயம் கூட தீர்ந்தது.”கூரிய பற்கள் போல் இதழ்கள் கொண்ட பூவுக்கு “மகிழம்பூ” எனப் பெயர் ஏன் வந்தது என்று தெரிந்து கொண்டேன்.சொல் பூவிலிருந்து நாயின் பற்களுக்குத்…