95. உருமு வெருளி-Brontophobia உருமு பற்றிய சங்கஇலக்கிய அடிகள் வருமாறு: உருமு சிவந்து எறியும் பொழுதொடு, பெரு நீர் (நற்றிணை : : 104:10) உருமுப் படு கனலின் இரு நிலத்து உறைக்கும் (ஐங்குறுநூறு :: 320:3) உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு, கொளை புணர்ந்து (பதிற்றுப்பத்து : : 30: 42) உருமுக் கண்ணுறுதலின், உயர் குரல் ஒலி ஓடி, ( கலித்தொகை : : 45: 3) உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் (அகநானூறு : :92:11) இடி…