பழைய உரைகள் வரலாற்றுக் கருவூலம் – மு.வை.அரவிந்தன்

பழைய உரைகள் வரலாற்றுக் கருவூலம் கடல்கோளுக்கும் நெருப்புக்கும் நீருக்கும் கறையானுக்கும் கல்லாத மக்களின் பொல்லாத அறியாமைக்கும் இரையாகி, கணக்கற்ற தமிழ்நூல்கள் மறைந்து விட்டன. அந்நூல்களின் சில பகுதிகளையும் பெயர்களையும் உரையாசிரியர்களே நமக்கு வழங்கிப் பேருதவி புரிந்துள்ளனர்… உரையாசிரியர்கள் தம் காலத்து மக்கள் நிலை,வாழ்க்கை முறை, நாகரிகம், பழக்கவழக்கம், பண்பாடு, அரசியல் போக்கு ஆகியவற்றை ஆங்காங்கே சுட்டிச் செல்கின்றனர். தமிழ்நாட்டு வரலாறு எழுதுவோர், பழைய உரைகள் வாயிலாகக் காலத்தின் குரலைக் கேட்கலாம்; வரலாற்று நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம். வரலாற்று ஆசிரியர்கள் பழைய உரைகளைச் சிறந்த வரலாற்று…

மூலப்பொருளை அறிய உதவுவன உரைகளே – கி.வா.சகநாதன்

மூலப்பொருளை அறிய உதவுவன உரைகளே!   இலக்கண நூல்களுக்கு உரைகள் இல்லாவிடின் அவற்றின் பொருளை அறிவது எளிதன்று. தொல்காப்பியத்தில், இலக்கணத்துக்கு உரை இவ்வாறு அமையவேண்டும் என்ற வரையறை இருக்கிறது. இலக்கணமும் இலக்கியமும் சமய நூல்களும் சூத்திர வடிவில் அமைந்திருப்பதால் அவற்றின் பொருளை அறிந்து கொள்ள உரைகள் இன்றியமையாதவை. இலக்கிய நூல்களின் பொருளையும் மரபறிந்து இலக்கண அமைதி தெரிந்து விளக்க வேண்டும். உரையாசிரியர்கள் அவ்வாறு செய்கிறார்கள். நூல்களின் பொருள்களை விளக்குவது மாத்திரம் உரையாசிரியர்களின் இயல்பு என்று எண்ணக் கூடாது. நூல்களின் கருத்தை விளக்கும்போது நூலைக் கற்பார்…